பிரேசில் : கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேர் பலி
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா நோய்த் தொற்று மிகவேகமாக பரவி வருவதோடு அதிக இழப்புகளையும் சந்தித்து வருகிறது.


தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா நோய்த் தொற்று மிகவேகமாக பரவி வருவதோடு அதிக இழப்புகளையும் சந்தித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேர் கரோனாவால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் அலையின் தாக்கம் குறைவது போல் தெரிந்து தற்போது மீண்டும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதால் கட்டுக்கடங்காமல் பரவும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருக்கிறது.
இதுவரை அந்நாட்டில் கரோனா பாதித்தவர்கள் 2.21 கோடி எனவும் அதில் 5.65 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் புதிதாக 34,885 பேர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு பின் அதிக கரோனா பாதித்த நாடுகளில் மூன்றாவது இடத்தில் பிரேசில் தொடர்ந்து நீடிக்கிறது. பலியானவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...