ரஷியாவில் ஒருநாளில் 799 பேர் கரோனாவுக்குப் பலி
ரஷியாவில் புதிதாக 21,571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 799 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ரஷியாவில் புதிதாக 21,571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 799 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,571 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 1,740 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை.
அதிகபட்சமாக மாஸ்கோவில் 2,076 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 65,12,859 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் மேலும் 799 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,67,241 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 5,36,841 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 20,067 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,08,777 ஆக உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...