தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஆப்கானிஸ்தான் : ராணுவத் தளபதியை மாற்றிய அதிபர் 

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் தலிபான்களின் ஆதிக்கம்  அதிகரித்து வருகிறது. ஆப்கனின் 65% நிலப்பகுதிகளை கைப்பற்றிய  தலிபான்கள் தற்போது காபூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் 

News image

ஆப்கானிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் வாலி முகமது அஹமத்ஸாய்(படம்: டிவிட்டர்)

Updated On :12 ஆகஸ்ட் 2021, 12:19 pm

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் தலிபான்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. ஆப்கனின் 65% நிலப்பகுதிகளை கைப்பற்றிய  தலிபான்கள் தற்போது காபூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் இன்னும் 90 நாட்களில் ஆப்கானிஸ்தான் முற்றிலும் தலிபான்களிடம் சரணடையும் என அமெரிக்க உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்திருக்கிறது.

தொடர்ந்து தாக்குதல்களில் தோல்வியைச் சந்தித்து வரும் ஆப்கன் ராணுவம் மேற்கொண்டு சரியான பதிலடியை கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதுவரை 9 மாகாணங்களை தலிபான்கள்  கைப்பற்றியதால் ஆத்திரம் அடைந்த அந்நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி ஆப்கனின் தற்போதைய ராணுவத் தளபதியான ஜெனெரல் வாலி முகமது  அஹமத்ஸாயை   பதவி நீக்கம் செய்து விட்டு புதிய ராணுவத் தளபதியாக ஆப்கன் சிறப்பு தாக்குதல்கள் படையின் தளபதியாக இருந்த ஹிபதுல்லா அலிசாயை  நியமித்திருக்கிறார். 

இருப்பினும் தலிபான்களே ஆப்கனில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.