கனடாவில் ஐஸ்கிரீம் கேக் வாங்குவதற்காக திடீரென நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்டிற்கு நீதிமன்றத்தில் ஆஜராக காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கனடா நாட்டின் டிஸ்டேல் என்ற நகரில் வியாழக்கிழமை ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறங்கியது. மருத்துவ ஆம்புலன்ஸ் வண்ணம் பூசப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவசர மருத்துவ உதவிக்காக முன் அறிவிப்பின்றி ஹெலிகாப்டர் தரையிறங்கியிருக்கலாம் என கருதிய காவல் அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 34 வயதான ஹெலிகாப்டர் பைலட் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பி அதனை வாங்குவதற்காக முன்னறிவிப்பின்றி ஹெலிகாப்டரை தரையிறக்கியது தெரிய வந்தது.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தான் : ராணுவத் தளபதியை மாற்றிய அதிபர்
இதனைத் தொடர்ந்து பைலட் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
கனடாவில் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக பைலட் திடீரென ஹெலிகாப்டரை தரையிறக்கிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


