கரோனா மூன்றாவது தவணை தடுப்பூசியை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு செலுத்துவதற்கு அமெரிக்க அனுமதி வழங்கவுள்ளது,
டெல்டா வகை கரோனா உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவிவருகிறது. அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக மூன்றாவது தவணை தடுப்பூசி வழங்க பல்வேறு நாடுகள் திட்டமிட்டுவருகிறது.
இந்நிலையில், கரோனா மூன்றாவது தவணை தடுப்பூசியை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு செலுத்த அமெரிக்க அனுமதி வழங்கவுள்ளது, உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு இந்த மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பட்சத்தில் அது கூடுதல் பயன் தருகிறது என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | உலகளவில் கரோனா பாதிப்பு 20.55 கோடியைக் கடந்தது!
உறுப்பு மாற்று சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு மாடர்னா தடுப்பூசியின் மூன்றாவது தவணை அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உறுவாக்குகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளின் மூன்றாவது தவணைக்கு இன்றே (வியாழன்கிழமை) ஒப்புதல் அளிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் முனைப்பு காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை செய்துகொண்டவர்கள் ஆகியோரின் உடல்களில் முதல் தவணை தடுப்பூசி போதுமான அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, கரோனா பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

8,000 சேவை மையங்களை அமைக்க மாருதி சுசுகி இந்தியா இலக்கு!

மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு!

எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

கேரளம்: அரசு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கிய 4 பெண்கள் கைது
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


