புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ரஷியா: 3-ஆவது நாளாக கரோனா பலி புதிய உச்சம்

ரஷியாவில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை தொடா்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:57 pm

DIN

ரஷியாவில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை தொடா்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 819 போ் உயிரிழந்தனா். இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனாவால் நாட்டில் அந்த நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக, தொடா்ந்து 3-ஆவது நாளாக தினசரி கரோனா பலி புதிய உச்சம் தொட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷியாவில் 22,144 பேருக்கு கரோனா உறுதி செய்ப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 65,79,212 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,69,683 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 58,67,890 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 5,41,639 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் சுமாா் 2,300 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.