ஹைட்டியில் நிலநடுக்கம்: 304 போ் பலி; 2 ஆயிரம் பேர் காயம்

ஹைட்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 304 போ் உயிரிழந்தனர் சுமாா் 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹைட்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 304 போ் உயிரிழந்தனர் சுமாா் 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வட அமெரிக்காவின் கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் டிபுரோன் தீபகற்பப் பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கமானது ஹட்டியின் தலைநகர் போர்ட் ஆப்-பிரின்சில் இருந்து மேற்கே 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. 

கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 304 உடல்கள் மீட்கப்பட்டன. சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.

நிலநடுக்கதைத் தொடா்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், பின்னா் அந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் வெடிப்புகள் காணப்படுவதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தொருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

ஹெட்டியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், இந்த ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகவும் மோசமானது என்று கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தின் பாதிப்பு தொடர்பான முழு விவரங்கள் தெரியும்வரை சர்வதேச உதவிகளை கேட்கப்போவதில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com