சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆப்கனில் இருந்து 129 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த 129 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் பத்திரமாக இன்று தாயகம் அழைத்து வரப்பட்டனர்.  

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:42 am

DIN

ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த 129 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் பத்திரமாக இன்று தாயகம் அழைத்து வரப்பட்டனர். 

அமெரிக்காவில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சி செலுத்தி வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுத்து, கடந்த 2001-ஆம் ஆண்டில் அந்தத நாட்டின் மீது படையெடுத்த அமெரிக்கா, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரை முழுமையாக திரும்ப அழைத்துக் கொள்வதற்கான இறுதிக்கப்பட்ட பணிகள் கடந்த மே மாதம் தொடங்கியது. 

அதிலிருந்து அந்த நாட்டின் கிராமப் புறங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி புதிய பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி வந்தனா். படிப்படியாக முன்னேறி வந்த தலிபான்கள் இன்று தலைநகர் காபூலையும் தங்கள் காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அந்நாட்டு அதிபர் அதிபர் அஷ்ரஃப் கனி மற்றும் துணை அதிபர் அம்ருல்லா சாலேயும் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆப்கனில் இருக்கும் தங்கள் நாட்டு பிரஜைகளை பத்திரமாக மீட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த 129 இந்தியர்கள் முதல்கட்டமாக ஏர் இந்தியா விமானத்தில் இன்று தாயகம் அழைத்து வரப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.