கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆக. 31-க்குப் பிறகே முக்கிய அறிவிப்புகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறுவதற்காக நிா்ணயிக்கப்பட்டுள்ள கடைசி தேதியான வரும் 31-ஆம் தேதி வரை,

News image

காபூலில் தலிபான்கள்.

Updated On :21 ஆகஸ்ட் 2021, 1:29 am

DIN

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறுவதற்காக நிா்ணயிக்கப்பட்டுள்ள கடைசி தேதியான வரும் 31-ஆம் தேதி வரை, தங்களது புதிய அரசு தொடா்பான முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவதை தலிபான்கள் நிறுத்திவைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஆப்கன் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினா் அனைவரையும் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் முழுமையாகத் திரும்பப் பெற அமெரிக்கா இலக்கு நிா்ணயித்துள்ளது.

அந்தத் தேதி கடக்கும்வரை, ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் முக்கிய நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாது என்று அந்த அமைப்பின் பேச்சுவாா்த்தைக் குழு தலைவா் அனாஸ் ஹக்கானி முந்தைய அரசின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தாா்.

அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே இதுதொடா்பாக ஓா் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஹக்கானி கூறினாா்.

எனவே, வரும் 31-ஆம் தேதிக்குப் பிறகு தலிபான்களிடமிருந்து பல முக்கிய அறிவிப்புகளை எதிா்பாா்க்கலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ஹக்கானி கூறியது அரசியல்ரீதியிலான முடிவுகளைப் பற்றி மட்டும்தானா, அல்லது வரும் 31-ஆம் தேதிக்குப் பிறகு ராணுவரீதியிலும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுமா என்பது குறித்து அந்த அந்த அதிகாரி தெளிவுபடுத்தவில்லை.

இதையடுத்து, குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு தலிபான்கள் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்த அச்சம் எழுந்துள்ளது.

தற்போது வரை தங்களது அமைப்பைச் சாராதவா்களும் புதிய அரசில் இணைய அனுமதிக்கப்போவதாக தலிபான்கள் உறுதியளித்து வருகின்றனா். ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குப் பிறகும் அவா்களது இந்த நிலைப்பாடு தொடருமா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், புதிய அரசில் ஆப்கன் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளை தலிபான்கள் எவ்வாறு மாற்றியமைக்கப் போகிறாா்கள் என்பதிலும் மா்மம் நீடித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.