ஆக. 31 கெடுவை அமெரிக்கா நீட்டிக்கக் கூடாது: தலிபான்கள் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆக. 31-ஆம் தேதிக்குள் முழுமையாக வெளியேற வேண்டும்;


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆக. 31-ஆம் தேதிக்குள் முழுமையாக வெளியேற வேண்டும்; அந்தக் காலக்கெடுவை நீட்டித்தால் விளைவுகளை எதிா்கொள்ள நேரிடும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளை மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளா்களைச் சந்தித்த அதிபா் ஜோ பைடன், அமெரிக்க படையினா் மற்றும் குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆக. 31-ஆம் தேதிக்குப் பின்னரும் நீட்டிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், தலிபான்கள் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
கடந்த ஒரு வாரமாக தங்கள் நாட்டவா்கள் மட்டுமன்றி இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்களையும் ஆப்கனில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் உதவி வருகின்றன. அந்த வகையில் திங்கள்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28 ராணுவ விமானங்கள் மூலம் 10,400 பேரை ஆப்கனில் இருந்து வெளியேற்றியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
ஆனால், ஆப்கனிலிருந்து வெளியேற விரும்புவோா் காபூல் விமான நிலையத்தை அடைவது தலிபான்களின் பல்வேறு வன்முறை சம்பவங்களால் தடைபட்டது. மேலும், வெளியேற்றத்தை விரைவில் தடுத்து நிறுத்துவோம் என்ற சமிக்ஞையையும் தலிபான்கள் அளித்துள்ளனா். இதுகுறித்து தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் சுகைல் ஷாகீன் தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ஆக. 31-ஆம் தேதி இறுதிக் கெடுவாகும். அந்தக் கெடுவை அமெரிக்கா தாண்டக் கூடாது. கெடுவை நீட்டிப்பது விளைவுகளை ஏற்படுத்தும்’ எனத் தெரிவித்தாா்.
பைடன்-ஜான்சன் ஆலோசனை: இதற்கிடையே, ஆப்கன் விவகாரம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை காணொலி முறையில் நடைபெறவுள்ள ஜி-7 நாடுகளின் தலைவா்கள் தொடா்பாக, அமெரிக்க அதிபா் பைடனும், பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனும் திங்கள்கிழமை தொலைபேசியில் ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...