மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு: 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானை விட்டு மக்கள் வெளியேறி வரும் நிலையில் காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

News image

காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு

Updated On :26 ஆகஸ்ட் 2021, 4:12 pm

ஆப்கானிஸ்தானை விட்டு மக்கள் வெளியேறி வரும் நிலையில் காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

தலிபான்கள் கட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்தபிறகு மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். தற்போது பயன்பாட்டில் காபூல் விமான நிலையம் மட்டும் உள்ள நிலையில் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அமெரிக்க பொது விவகாரங்களுக்கான உதவி பாதுகாப்பு செயலாளர் ஜான் கிர்பி, “காபூலில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்பினால் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.