

அக்டோபர் மாதத்திலிருந்து சிறார்களுக்கு சைடஸ் கேடிலா தடுப்பூசி செலுத்தப்படும் என அரசின் கரோனா குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.
மருத்துவ குறைபாடுள்ள சிறார்களுக்கு முன்னுரிமை, 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளின் விவரம் உள்ளிட்டவை அக்டோபர் மாதம் சைடஸ் கேடிலா தடுப்பூசி விநியோகிப்பதற்கு முன்பு வெளியிடப்படும் என அரசின் கரோனா குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.
நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவரான அரோரா இதுகுறித்து மேலும் கூறுகையில், "குழுந்தைகள் கரோனாவால் பாதிக்கப்படுவதற்கு குறைவான சாத்தியக்கூறுகளே உள்ளன என சமீபத்திய செரோ சர்வேயில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, மீண்டும் பள்ளிகளை திறக்கலாம்.
இந்தியாவில் 12 முதல் 18 வயது வரையிலான சிறார்கள் 12 கோடி பேர் உள்ளனர் எனக் கணிக்கிடப்பட்டுள்ளது. அதில், 1 சதவிகித்திற்கும் குறைவானவர்களுக்கு உடல்நலை குறைபாடுள்ளது. எனவே, கரோனாவால் அவர்களின் உடல் நிலை தீவிரமாக பாதிக்கப்படுவதற்கும் இறப்பு நிகழ்வதற்கு குறைவான சாத்தியக்கூறுகளே உள்ளன.
அதற்கு நேர்மாறாக, 18 முதல் 45 வயது வரை இருக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கு கரோனாவால் தீவிரமான உடல்நல குறைவு ஏற்படுவதற்கு 10 முதல் 15 மடங்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பு இந்த வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதே எங்களுக்கு முன்னுரிமை.
இதையும் படிக்க | ஆப்கனிலிருந்து பயங்கரவாதம் ஊடுருவினால் ஒடுக்கப்படும்: முப்படை தளபதி
அக்டோபர் மாதத்திலிருந்து சிறார்களுக்கு சைடஸ் கேடிலா தடுப்பூசி செலுத்தப்படும் என அரசின் கரோனா குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லலாம். அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான தேவை தற்போது இல்லை. ஆனால், அவர்களை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது அவசியம். பெற்றோர்கள் மற்றும் பள்ளி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.