முதல்முறையாக ஜப்பானியருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

ஜப்பானில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில், முதல்முறையாக ஜப்பானியருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல்முறையாக ஜப்பானியருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
முதல்முறையாக ஜப்பானியருக்கு ஒமைக்ரான் பாதிப்பு


டோக்கியோ: ஜப்பானில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில், முதல்முறையாக ஜப்பானியருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த 30 வயது நபர், அண்மையில் இத்தாலி சென்றுவிட்டு டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர், இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருடன் விமானத்தில் வந்த 41 பயணிகளும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு மட்டும்தான் கரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com