வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் 10 ஆம் ஆண்டு நினைவை போற்றும் விதமாக வடகொரிய மக்கள் சிரிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
வடகொரியாவின் தற்போதைய அதிபரான கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், அவருடைய 10-வது ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக வடகொரியாவில் உள்ள பொதுமக்கள் இன்றிலிருந்து 11 நாள்கள் சிரிக்கவோ , கொண்டாட்டங்களில் ஈடுபடவோ , மது குடிக்கவோ கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருக்கிறது.
முன்னதாக , இந்தாண்டு தொடக்கத்தில் தன்னைப் போல் யாரும் சிகை அலங்காரம் வைக்கக் கூடாது, மெலிதான ஜீன்ஸ் அணியக் கூடாது எனக் கூறிய கிம் ஜாங் உன் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டதும் இணையத்தில் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


