செய்தி சேனலை முடக்கிய யூடியூப்: உச்சகட்ட கோபத்தில் ரஷியா
செய்தி சேனலை முடக்கிய யூடியூப்: உச்சகட்ட கோபத்தில் ரஷியா

செய்தி சேனலை முடக்கிய யூடியூப்: உச்சகட்ட கோபத்தில் ரஷியா

ஜெர்மனியில் ரஷியாவிற்கு சொந்தமான செய்தி சேனலை யூடியூப் நிறுவனம் மீண்டும் முடக்கியிருப்பது இருநாட்டு உறவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Published on

ஜெர்மனியில் ரஷியாவிற்கு சொந்தமான செய்தி சேனலை யூடியூப் நிறுவனம் மீண்டும் முடக்கியிருப்பது இருநாட்டு உறவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் இது ரஷிய ஊடகத்தின் மீது நடத்தப்பட்ட போர் என கண்டித்துள்ளார். சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் மற்றும் யூடியூப் நிறுவனம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ரஷிய செய்தி ஒழுங்குமுறை ஆணையம் கூகுள் நிறுவனத்திடம் தங்கள் நாட்டின் செய்தி சேனலின் மீதான தடை நீக்கக் கோரியுள்ளது.

யூடியூப் நிறுவனம் பல்வேறு நாடுகளில் அந்ததந்த நாடுகளின் விதிகளுக்கேற்ப இயங்கி வருகிறது. யூடியூப் தளத்தில் பல்வேறு செய்தி நிறுவனங்களும் தங்களது செய்தி சேனல்களை நடத்திவருகின்றன.

இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் இயங்கிவரும் ரஷியாவைச் சேர்ந்த பிரபல செய்தி நிறுவனமான ஆர்டிக்கு சொந்தமான இரண்டு யூடியூப் சேனல்களை யூடியூப் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடக்கியது.

கரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை வழங்கியதற்காக இந்த சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து புதிதாக தொடங்கப்பட்ட ரஷியா டுடே எனும் சேனலை யூடியூப் நிறுவனம் எத்தகைய முன்னறிவிப்புமின்றி திடீரென முடக்கியதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ரஷிய ஊடக கட்டுப்பாட்டாளர் ரோஸ்கோம்நாட்ஸர் தெரிவித்துள்ளார்.  இந்த விவகாரம் ஜெர்மனி மற்றும் ரஷிய உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com