/

ரஷியாவில் மேலும் 14,861 பேருக்கு கரோனா: 502 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,861 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 502 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :13 பிப்ரவரி 2021, 8:56 am

ANI

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,861 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 502 பேர் உயிரிழந்துள்ளனர். 

கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, புதிதாக 14,861 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 40,57,698 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 1,963 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 

ரஷியாவில் கரோனா தொற்றுக்கு மேலும் 502 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 79,696 ஆக அதிகரித்துள்ளது. 

ஒரேநாளில் 18,765 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், தற்போதுவரை 35,77,907 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.