/

ஆப்கன் பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஓட்டுநர் கொலை

ஆப்கன் பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :14 பிப்ரவரி 2021, 7:46 pm IST

ஆப்கன் பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கன் பாதுகாப்புத்துறை அமைச்சரின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் முகமது அப்சல். இவர் காபூலில் உள்ள மக்ரோரேயன்-இ-சார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
இந்த நிலையில் நேற்றிரவு இவர் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரின் 5 வயது குழந்தையையும் மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். 
இச்சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆப்கனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.