பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

டிரம்பை கைது செய்ய கைது ஆணை பிறப்பித்த இராக்

ஈரானிய தளபதி சுலைமானியைக் கொன்ற வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்பை கைது செய்ய இராக் நீதிமன்றம் பிணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
அமெரிக்க அதிபர் டிரம்ப்
Updated On :7 ஜனவரி 2021, 4:19 pm

DIN

ஈரானிய தளபதி சுலைமானியைக் கொன்ற வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்பை கைது செய்ய இராக் நீதிமன்றம் பிணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இராக் துணை ராணுவப் படையான ஹஷீத் அல்-ஷாபியின் வாகனங்கள் மீது கடந்த 2020 ஜனவரி மாதம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய அந்தத் தாக்குதலில் ஈரானிய இஸ்லாமிய புரட்சி ராணுவத்தின் வெளிநாட்டுப் பிரிவான காத்ஸ் படையின் தலைவர் காசிம் சுலைமானி உயிரிழந்தார். மேலும் 7 பேர் பலியாகினர்.
அதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்தது.

ஈரான் தளபதி கொல்லப்பட்டதிலிருந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்பை கைது செய்ய ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பை கைது செய்யக்கோரிய வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கைது ஆணை பிறப்பித்து இராக் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.