மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பிரிட்டன் - இந்தியா விமான சேவை மீண்டும் தொடக்கம்

பிரிட்டன் - இந்தியா இடையிலான விமான போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது

News image
பிரிட்டன் - இந்தியா விமான சேவை மீண்டும் தொடக்கம் (கோப்புப்படம்)
Updated On :8 ஜனவரி 2021, 7:06 am

DIN

பிரிட்டன் - இந்தியா இடையிலான விமான போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

புதியவகை கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 23-ஆம் தேதி முதல் பிரிட்டன் - இந்தியா இடையிலான விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே 15 நாள்களுக்கு பிறகு மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா பல்வேறு நாடுகளுக்கு பரவி வந்ததன் எதிரொலியாக அந்நாட்டுடனான விமான போக்குவரத்து சேவையை பல்வேறு நாடுகள் நிறுத்தி வைத்தன.

அந்தவகையில் இந்தியாவிலும் புதியவகை கரோனா பரவல் அதிகரித்து வந்ததால், பிரிட்டன் உடனான விமான சேவை நிறுத்தப்பட்டது.

இதனிடையே கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் கரோனா பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும் என்றும், அதற்காக ரூ.3,400 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தடை உத்தரவுக்குப் பிறகு கடந்த 6-ஆம் தேதி தில்லி மற்றும் மும்பையிலிருந்து பிரிட்டனுக்கு புறப்பட்ட விமானங்கள் இன்று மீண்டும் இந்தியா வந்தடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.