உலகளவில் கரோனா பாதிப்பு 9 கோடியைக் கடந்தது  

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9 கோடியாக உயர்ந்துள்ளது. 
உலகளவில் கரோனா பாதிப்பு 9 கோடியைக் கடந்தது  
Updated on
1 min read

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9 கோடியாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,00,77,450 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 19,34,813 போ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 6,44,63,365 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,36,79,272 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,08,517 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்‍காவில் தொற்று பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,26,99,938 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 3,81,480 ஆக உயர்ந்துள்ளது. 

2-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் 10,451,346 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,51,048 பேர் உயிரிழந்துள்ளனர். 

3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 80,75,998 ஆக உயர்ந்துள்ளதோடு, 2,02,657-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 71,44,011 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com