நியூயார்க்கில் தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பாக அந்நாட்டு ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ கூறியதாவது,
தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள் மெண்டன் என்ற பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த மூன்று வீரர்கள் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணத்தை நியூயார்க் தேசிய காவல்படை மற்றும் பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் விசாரித்து வருகின்றது.
உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வீரர்கள் மறைவுக்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில் அரசு அலுவலக கட்டடங்களில் 50 சதவீத ஊழியர்களோடு தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


