காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் அமெரிக்கா: ஐ.நா. வரவேற்பு

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கு ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

News image
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் அமெரிக்கா: ஐ.நா. வரவேற்பு
Updated On :21 ஜனவரி 2021, 10:46 am

DIN

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கு ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுவது பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம். வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் வெளியிடும் கார்பன் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு (2020) நவம்பரில் அப்போதைய அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக விலகியது.

இந்நிலையில் புதிய அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதாக அறிவித்தார். இதற்கு ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் வரவேற்றுள்ளார்.

மேலும் காலநிலை மாற்ற அவசரநிலையை சமாளிக்கவும், கரோனா தொற்று நெருக்கடியிலிருந்து மீளவும் புதிய அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவதில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பதவியேற்ற நிலையில் பாரீஸ் ஒப்பந்தத்தில் இணைவதற்காக அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணம் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.