டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உலகளவில் கரோனா பாதிப்பு 9.93 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.93 கோடியாக உயர்ந்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 7:22 pm

DIN

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.93 கோடியாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

உலகின் 219 நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கி, வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், நோய்த் தொற்று பரவல் வேகம் பல்வேறு நாடுகளில் கட்டுக்குள் வரமால் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. 

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,93,24,198 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 21,30,341போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 7,13,69,788 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,58,23,680 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,10,665 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்‍காவில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,55,66,789 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 4 லட்சத்து 27 ஆயிரத்து 635 ஆக உயர்ந்துள்ளது.

2-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1 கோடியே 6 லட்சத்து 55 ஆயிரத்து 435க்கும் மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 53 ஆயிரத்து 376 பேர் உயிரிழந்துள்ளனர். 

3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 88 லட்சத்து 16 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளதோடு, 2 லட்சத்து 16 ஆயிரத்து 475- க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.