உலகளவில் கரோனா பாதிப்புக்கு 21.84 லட்சம் பேர் பலி
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவர்களில் 21.84 பேர் உயிரிழந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .


உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவர்களில் 21.84 பேர் உயிரிழந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வியாழக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 10,14,34,938 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 21,84,126 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 7,33,21,941 பேர் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,59,25,903 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,10,179 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,61,66,201 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 4 லட்சத்து 39 ஆயிரத்து 517 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,07,02,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,53,885 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,00,485 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 2,20,237 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...