பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கரோனாவுக்கு உலகளவில் 40 லட்சம் பேர், இந்தியாவில் 4 லட்சம் பேர் பலி

உலகளவில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 40,00,585 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 கோடியே 49 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

News image
உலகளவில் 40 லட்சம் பேர், இந்தியாவில் 4 லட்சம் பேர் பலி
Updated On :6 ஜூலை 2021, 4:21 am

DIN

உலகளவில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 40,00,585 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 கோடியே 49 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் இதுவரை 18,49,31,148 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 16,92,98,421  பேர் மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 1,16,32,142 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 77,729 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், ஒரு நாளில் கரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையை விட மிக அதிக வேகத்தில் கரோனா தொற்று பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

உலகில் பெரும்பாலான நாடுகளில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடிய நிலையில், பெரும்பாலான நாடுகள் தற்போது தொற்றிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது.

தொற்று பாதிப்பைத் தடுக்க அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்‍கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,45,98,361 -ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்‍கை 6,21,335 -ஆக உள்ளது. 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,06,18,939 -ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்‍கை 4,03,310 -ஆக உள்ளது. 

இதேபோல் பிரேசில், பிரான்ஸ், துருக்‍கி, இத்தாலி, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.