

ஸ்வீடனில் நேற்று இரவு ஏற்பட்ட விமான விபத்தில் விமானி உள்பட 9 பேர் பலியாகினர்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிற்கு மேற்கே 160 கிலோமீட்டர் தொலைவில் ஒரேப்ரோ நகரில் விமானி உள்பட 9 பேருடன் சிறிய ரக விமானம் சென்று கொண்டிருந்தது.
நேற்று இரவு 7 மணியளவில் ஒரேப்ரோ விமான நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து அடுத்த சில வினாடிகளில் தீ பற்றி எரிந்தது.
விபத்தில், விமானத்தில் பயணம் செய்த விமானி மற்றும் 8 ஸ்கை-டைவிங் வீரர்கள் என 9 பேரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.