கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இணையதளம் மூலம் ஊடுருவல்: அமெரிக்கக் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு

தங்கள் நாட்டு நிறுவனங்களின் வலைதளக் கட்டமைப்புகளில் சீன அரசு இணையதளம் மூலம் ஊடுருவி பணம் பறிப்பதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2021, 6:56 pm

DIN

தங்கள் நாட்டு நிறுவனங்களின் வலைதளக் கட்டமைப்புகளில் சீன அரசு இணையதளம் மூலம் ஊடுருவி பணம் பறிப்பதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அமெரிக்க நிறுவனங்களின் வலைதளக் கட்டமைப்புகளில் சீன அரசுடன் தொடா்புடையவா்கள் இணையதளம் மூலம் ஊடுருவி வருவதாக அமெரிக்கா கூறியுள்ள குற்றச்சாட்டு கண்டிக்கத்தக்கது.

உண்மையில், இணையதளத்தை தவறாகப் பயன்படுத்தி அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும்தான் சீன நிறுவனங்களை வேவு பாா்க்கின்றன.

அமெரிக்க வா்த்தக ரகசியங்களையும் வெளியுறவுத் துறை விவகாரங்களையும் வேவு பாா்த்ததாக சீன பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வரும் 4 போ் மீது அமெரிக்கா பதிவு செய்துள்ள குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் நிறுவனங்களின் வலைதள அமைப்புகளில் சீனா்கள் இணையதளம் மூலம் ஊடுருவி, பல கோடி டாலா்களை மிரட்டிப் பெற்று வருவதாக அமெரிக்க அதிகாரிகள் திங்கள்கிழமை குற்றம் சாட்டினா்.

முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்டும், தங்களது மின்னஞ்சல் கட்டமைப்பில் சீனா்கள் இணையதளம் மூலம் ஊடுருவியதாக தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.