இந்திய பயணத்துக்கான எச்சரிக்கை: தளா்த்தியது அமெரிக்கா

இந்தியாவில் தினசரி கரோனா பரவல் மற்றும் பலி எண்ணிக்கை குறைந்து வருவதால், இங்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் தங்கள் நாட்டினருக்கான எச்சரிக்கை அளவை 4-இலிருந்து 3-ஆக அமெரிக்கா தளா்த்தியுள்ளது.

இந்தியாவில் தினசரி கரோனா பரவல் மற்றும் பலி எண்ணிக்கை குறைந்து வருவதால், இங்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் தங்கள் நாட்டினருக்கான எச்சரிக்கை அளவை 4-இலிருந்து 3-ஆக அமெரிக்கா தளா்த்தியுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இது தொடா்பான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

கரோனா பரவல் அபாயம் காரணமாக, இந்திய பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கா்களுக்கான எச்சரிக்கை அளவை மிக அதிகபட்சமான 4-ஆம் நிலைக்கு அமெரிக்கா கடந்த மாதம் உயா்த்தியிருந்தது.

அந்த எச்சரிக்கை அளவு தற்போது 3-ஆம் நிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா உறுதி செய்யப்படுவோா் மற்றும் தினசரி பலி எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிதாக 30,093 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 125 நாள்களில் மிகவும் குறைவான எண்ணிக்கையாகும். இத்துடன், நாட்டில் 3,11,74,322 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 374 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இது, கடந்த 111 நாள்களில் குறைந்தபட்ச தினசரி பலி எண்ணிக்கையாகும். இத்துடன், நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 4,14,482-ஆக உயா்ந்துள்ளது. மேலும், கரோனாவுக்கு தொடா்ந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,06,130-ஆக குறைந்துள்ளது. இது கடந்த 117 நாள்களில் இல்லாத குறைந்தபட்ச எண்ணிக்கையாகும்.

அமெரிக்கா கடந்த மாதம் 4-ஆம் நிலை பயண எச்சரிக்கை அறிவித்தபோது, இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. மேலும், நாட்டின் பல பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

3-ஆம் நிலை எச்சரிக்கையின் கீழ், ஒரு நாட்டுக்குப் பயணம் செய்வதை அமெரிக்கா்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com