ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ரஷ்யா : கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்தது

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் புதிதாக கரோனா நோய்த் தொற்றால் 23,770 பேர்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அந்நாட்டு கரோனா கண்காணிப்பு மையம் தெரிவித்திருக்கிறது

News image
ரஷ்யா : கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்தது
Updated On :21 ஜூலை 2021, 7:55 am

DIN

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் புதிதாக கரோனா நோய்த் தொற்றால் 23,770 பேர்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அந்நாட்டு கரோனா கண்காணிப்பு மையம் தெரிவித்திருக்கிறது . இதன் மூலம்  நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைத்  தாண்டி இருக்கிறது.

மேலும் நாடு முழுக்க தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 784 லிருந்து 1,49,922 ஆகவும் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22,218 லிருந்து 5,382,213 ஆகவும் உயர்ந்திருக்கிறது. 

கரோனாப் பரவலில் ரஷ்யாவின் மோசமானப் பகுதியாக மாஸ்கோ தொடர்ந்து நீட்டித்து வருவதாகவும்    புதிதாக  கரோனா நோய்த்  தொற்றால்   பாதிக்கப்பட்டவர்கள் 3,188 பேர் எனவும் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 1.47 லட்சம் என்றும்  கரோனா கண்காணிப்பு மையம் தெரிவித்திருக்கிறது.

ரஷ்யாவில் இதுவரை  16 கோடி பேருக்கு கரோனா மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.