கரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கரோனா தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தனர். தொற்று பாதிப்பு ஏற்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
இந்நிலையில் உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பின் காரணமாக 15 லட்சம் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
லான்செட் இதழ் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட முதல் 14 மாதங்களில் உலகம் முழுவதும் 15 லட்சம் குழந்தைகள் தங்களைக் கவனித்து வந்த பெற்றோர்கள் அல்லது காப்பாளர்களை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.
கரோனா இறப்புகள் அதிகம் பதிவான 21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஒவ்வொரு 19 பேர் இறப்பில் ஒரு குழந்தை தனது பெற்றோரை இழந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு 12 விநாடிக்கும் ஒரு குழந்தை தனது பெற்றோரை இழந்து வருவதாக ஆய்வுக்குழுவைச் சேர்ந்த டாக்டர். சூசன் ஹில்ஸ் தெரிவித்துள்ளார்.
கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தக் கோரியுள்ள இந்த ஆய்வானது அவர்களுக்கு நீண்டகால உதவிகள் தேவைப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


