பாகிஸ்தான் : கரோனா தொற்றால் 10 லட்சம் பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்றால் இதுவரை 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.


பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்றால் இதுவரை 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருக்கிறது . இதன் மூலம் உலகளவில் 10 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பாளர்களைக் கொண்ட 30 வது நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,425 பேர் கரோனா தொற்றுக்கு ஆளானதால் ஒட்டுமொத்தமாக பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,000,034 என்றும் 11 பேர் இறந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
அந்நாட்டின் தேசிய மருத்துவ மையம் அளித்த தகவலில் இதுவரை கரோனாவிற்கு பலியானர்வகளின் எண்ணிக்கை 22,939 பேர் என அறிவித்திருக்கிறார்கள் .
கரோனாவால் பாதிக்கப்பட்ட 10 லட்சம் பேரில் 53,623 சிகிச்சையில் இருப்பதாகவும், 923,472 பேர் குணமடைந்திருப்பதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 25,215 பேருக்கு மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...