காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரேசிலில் கரோனா பலி 5.50 லட்சத்தைக் கடந்தது!

பிரேசிலில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.50 லட்சத்தைக் கடந்துள்ளது. 

News image
Updated On :27 ஜூலை 2021, 7:17 am

DIN

பிரேசிலில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.50 லட்சத்தைக் கடந்துள்ளது. 

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது: 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 578 பேர் பலியாகினர். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 5,50,502 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 18,999 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,97,07,662 -ஆக அதிகரித்துள்ளது. 1,83,98,567 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

நாட்டில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.