மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜெர்மனி தொழிற்சாலையில் தீவிபத்து: நகரைச் சூழ்ந்த கரும்புகை

ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

News image

ஜெர்மனி தொழிற்சாலையில் தீவிபத்து: நகரைச் சூழ்ந்த கரும்புகை

Updated On :27 ஜூலை 2021, 12:46 pm

ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

ஜெர்மனியில் உள்ள லெவர்குசன் நகரத்தில் வேதியியல் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த தீடீர் வெடிவிபத்தால் கரும்புகை சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒருவர் பலியானார். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக பேசிய பேரிடர் மேலாண்மைத் துறை இந்த விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ளது. தொழிற்சாலையில் குளிரூட்டியில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.