தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முதன்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல்: சீனாவில் அதிர்ச்சி

சீனாவில் மனிதருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

News image
முதல்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல்: சீனாவில் பதிவான முதல் பாதிப்பு
Updated On :1 ஜூன் 2021, 11:48 am

DIN

சீனாவில் மனிதருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் பாதிப்பு 2 ஆண்டுகள் ஆகியும் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முன் இல்லாத அளவு அதிகப்படியான மக்களை பாதித்துள்ள கரோனா வைரஸிலிருந்து தப்பிக்க பல்வேறு நாடுகளும் தீவிரமாக போராடி வருகின்றன. 

இந்நிலையில் கரோனா தொற்றின் தாக்கம் மறைவதற்குள்ளாக சீனாவில் மற்றுமொரு புதிய தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது அந்நாட்டின் மருத்துவத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

ஹெச்10என்3 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸால் ஏற்படும் பறவைக்காய்ச்சல் முதன்முறையாக மனிதருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சீனாவின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 41 வயதான நபர் ஒருவருக்கு இந்த ஹெச்10என்3 பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பறவைக் காய்ச்சல் அறிகுறிகளுடன் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஹெச்10என்3 வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஹெச்10என்3 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபரை மருத்துவத் துறை கண்டறிந்துள்ளது.

இது பொதுவான வைரஸ் கிருமி அல்ல எனத் தெரிவித்துள்ள மருத்துவத்துறை ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸின் மரபணுவை பகுப்பாய்வு செய்து இது பழைய வைரஸ்களிடமிருந்து பரிணமித்ததா அல்லது புதிய வைரஸா என்பதை கண்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ஹெச்10என்3 கோழிகளில் பாதிப்பை ஏற்டுத்தினாலும் இதுவரை மனிதர்களில் தொற்று பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. எனினும் தற்போது மனித உடலில் இந்த வைரஸின் முதல் பாதிப்பு பதிவாகியுள்ளது மருத்துவத் துறையினரை கலக்கமடைய செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.