கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நேபாளத்தில் கருப்பு பூஞ்சைக்கு முதல் பலி: 10க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நேபாளத்தில் கருப்பு பூஞ்சை நோய் பரவலாகி வரும் நிலையில் முதல் இறப்பு பதிவாகியுள்ளது.

News image

நேபாளத்தில் கருப்பு பூஞ்சைக்கு முதல் பலி

Updated On :3 ஜூன் 2021, 4:28 pm

நேபாளத்தில் கருப்பு பூஞ்சை நோய் பரவலாகி வரும் நிலையில் முதல் இறப்பு பதிவாகியுள்ளது.

நேபாளத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 10 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி உள்ளது. 

கைலாலி மாவட்டத்தில் உள்ள செட்டி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 65 வயதான முதியவர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை பலியானார். 

மே 31 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு புதன்கிழமை கருப்பு பூஞ்சை இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

இவற்றுக்கு மத்தியில் கரோனா பாதிப்பு காரணமாக காத்மாண்டில் ஜூன் 14 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.