மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - ரஷிய அதிபர் புதின் சந்திப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் சந்தித்துக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.

News image
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு
Updated On :16 ஜூன் 2021, 1:45 pm

DIN

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் சந்தித்துக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது. 

உலகின் முன்னணி வல்லரசு நாடுகளாக அறியப்படுபவை அமெரிக்காவும், ரஷியாவும் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளில் எதிரெதிர் பார்வை கொண்டவை. ஒன்றுக்கொன்று போட்டியாக உள்ள இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேசிக் கொள்வது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஸ்சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் புதன்கிழமை சந்தித்துக் கொண்டனர். 

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு ரஷிய அதிபருடன் நடைபெறும் முதல் நேரடி சந்திப்பு  என்பதால் உலகின் கவனம் இந்த சந்திப்பின் பக்கம் திரும்பியுள்ளது. 

இந்த சந்திப்பில் அணு ஆயுதம் குறைப்பு, கரோனா தொற்று பரவல் நிலைகள், உக்ரைன் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு உலக அரசியல்  குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.