ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 258 தலிபான்கள் சுட்டுக்கொலை
ஆப்கனில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 258 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


ஆப்கனில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 258 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நங்கர்ஹார், லக்மான், ஃபரியாப், ஹெல்மண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தலிபான் அமைப்பினர் எதிரான தாக்குதலில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 258 தலிபான்கள் கொல்லப்பட்டனர். மேலும் 156 பேர் காயமடைந்தனர்.
அதேபோல் வியாழக்கிழமை, சாபுல் மாகாணத்தின் ஷா ஜாய் மற்றும் ஷின்காய் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 19 தலிபான் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
சமீபகாலங்களில் தலிபான் அமைப்பினருக்கும், ஆப்கன் ராணுவத்தினருக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...