கரோனா பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஜூலை 15 வரை நீட்டிக்கப்படுவதாக பிலிப்பின்ஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடை விதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாட்டில் நிலவி வரும் கரோனா தொற்று சூழல் காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த அறிவிப்பை மேலும் 15 நாள்களுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை 15ஆம் தேதி வரை இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகளுக்கு பிலிப்பின்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


