பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வரவிருக்கிறார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியா வரவிருந்தார். ஆனால், கரோனா பரவல் காரணமாக அவரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அவர் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் புவிசார் அரசியல் மையம் எனும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் வாய்ப்புகளை வெளிக்கொண்டுவரவும் ஆசிய பொருளாதார சங்கத்தின் உறுப்பினராக பிரிட்டன் விண்ணப்பித்துள்ளது குறித்தும் அவரது பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்தியா - பிரிட்டன் இடையேயான நட்புறவு அதிகரிக்கும் விதத்திலும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை மேம்படும் விதத்திலும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம் என்று தெரிகிறது.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு (எஃப்.டி.ஏ) முன்னோடியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து மேம்பட்ட வர்த்தக கூட்டாண்மை (ஈ.டி.பி) குறித்து இந்த பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிரெக்சிட் நடவடிக்கைக்குப் பிறகு பிரிட்டன் பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


