தான்சானியா அதிபராக முதல்முறையாக பெண் பதவியேற்பு

தான்சானியா அதிபர் இதயநோய் காரணமாக காலமானதைத் தொடர்ந்து துணை அதிபர் சமியா சுலுஹூ ஹாசன் வெள்ளிக்கிழமை புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
சமியா சுலுஹூ
சமியா சுலுஹூ

தான்சானியா அதிபர் இதயநோய் காரணமாக காலமானதைத் தொடர்ந்து துணை அதிபர் சமியா சுலுஹூ ஹாசன் வெள்ளிக்கிழமை புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

தான்சானியா அதிபராக செயல்பட்டு வந்தவர் ஜான் மகுஃபுலி கடந்த சில வருடங்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2 வார காலமாக பொது நிகழ்ச்சியில் மகுஃபுலி கலந்து கொள்ளாத நிலையில் அவரது உடல்நலம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. 

மகுஃபுலி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் இதய நோய் காரணமாக புதன்கிழமை உயிரிழந்ததாக துணை அதிபர் சமியா சுலுஹூ அறிவித்தார். 

இந்நிலையில் தான்சானியா புதிய அதிபராக சமியா சுலுஹூ தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சமியா வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இவர் தான்சானியா நாட்டின் முதல் பெண் அதிபர் என்னும் பெருமையையும் பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com