கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.


பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டேன். இதைச் செய்ய உதவிய அனைத்து விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றி.
கரோனா பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் சிறந்த வழி. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...