ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,221 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 393 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த கரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக 9,221 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 44,92,692 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 1,787 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
ரஷியாவில் கரோனா தொற்றுக்கு மேலும் 393 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி 96,612 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 41,09,281 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 2,86,799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கைப்பேசி, மளிகைக் கடைகளில் ரூ. 2.55 லட்சம் திருட்டு
இதுவரை ரூ. 2.36 கோடி பறிமுதல்; ரூ. 1.13 கோடி விடுவிப்பு

எதிரிகளை புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்: சீமான்

திமுகவுக்கு பட்டியலின மக்கள் தக்க பாடம் புகட்டுவா்: அன்புமணி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


