ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜப்பான் மீதான அமெரிக்காவின் பயணக் கட்டுப்பாடு ஒலிம்பிக் போட்டியை பாதிக்குமா?

கரோனா பரவல் காரணமாக தங்கள் நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது ஒலிம்பிக் போட்டிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

News image
ஜப்பான் மீதான அமெரிக்காவின் பயணக் கட்டுப்பாடு ஒலிம்பிக் போட்டியை பாதிக்குமா?
Updated On :25 மே 2021, 12:08 pm

DIN

கரோனா பரவல் காரணமாக தங்கள் நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது ஒலிம்பிக் போட்டிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

அந்நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், தடுப்பூசி போட்டுக்கொண்டு செல்ல வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான், இலங்கைக்கு குடிமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. 

அந்நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், தடுப்பூசி போட்டுக்கொண்டு செல்ல வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

அமெரிக்க அரசின் இந்த உத்தரவு  டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் கட்சுனோபு கடோ தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை பேசிய அவர், “அமெரிக்க அரசின் பயண எச்சரிக்கை ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புடையது அல்ல” எனத் தெரிவித்தார். 

கரோனா பரவலின் மத்தியில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு அந்நாட்டு மக்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில் அமெரிக்க அரசின் உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.