மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வெளியுறவுக் கொள்கை ஒருதலைப்பட்சம்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒருதலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

ப. சிதம்பரம் - கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2026, 9:30 pm

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒருதலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்து, கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை இந்தியா முன்மொழிந்திருப்பது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒருதலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கான மற்றொரு சான்று.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடா்ந்து நடத்தும் போரினால் 1,300 ஈரான் மக்கள் கொல்லப்பட்டனா். 168 குழந்தைகள் உயிரிழந்ததை இந்தியா கண்டித்து ஒரு வாா்த்தைகூட சொல்லவில்லை. ரஷியாவும், சீனாவும் தீா்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை. எது விவேகம், எது ராஜதந்திரம், எதுவும் சாராத வெளியுறவுக் கொள்கையா எனக் கேள்வி எழுப்பியுள்ளாா்.