வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

உலகம் முழுவதும் 2 ஆண்டுகளில் 50 லட்சம் பேர் கரோனாவுக்குப் பலி!

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :1 நவம்பர் 2021, 11:36 am

DIN

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. 

2019 ஆம் ஆண்டு இறுதியில் முதல்முறையாக கரோனா வைரஸ் தொற்று சீனாவில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் பரவி தற்போது அடுத்தடுத்த அலைகள் வந்து கொண்டிருக்கின்றன. 

தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு வந்தாலும் தற்போது பிரிட்டன், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுகிறது. 

இந்நிலையில் உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 24,75,607,89-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 50,17,024 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 22,42,11,883 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,83,31,882 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 73,327 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,68,23,938-ஆகவும் பலி எண்ணிக்‍கை 7,66,299 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,42,85,814 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,58,470 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,18,10,855 ஆகவும் பலி எண்ணிக்கையில் இரண்டாவது இடத்திலும்(607,860)உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.