வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனாவால் மேலும் 5 லட்சம் பேர் உயிரிழப்பு; எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு

பிப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பிய கண்டத்தில் கரோனா காரணமாக மேலும் ஐந்து லட்சம் பேர் உயிரிழப்பர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :4 நவம்பர் 2021, 11:35 am

DIN

ஐரோப்பிய கண்டத்தில் அதிகரித்துவரும் கரோனா உயிரிழப்பு கவலை அளிக்கும் விதமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்தாண்டு தொடக்கத்திற்குள் அந்த கண்டத்தில் கரோனா காரணமாக மேலும் 5 லட்சம் பேர் உயிரிழப்பர் என்றும் எச்சரித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கண்ட இயக்குநர் ஹான்ஸ் க்ளூஜ் இதுகுறித்து கூறுகையில், "அங்கு 53 நாடுகளில் தற்போது நிலவும் பரவல் தன்மை மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. 

தற்போதை நிலை தொடர்ந்தால், பிப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பிய கண்டத்தில் கரோனா காரணமாக மேலும் ஐந்து லட்சம் பேர் உயிரிழப்பர்" என்றார். உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கண்ட பிரிவில், மத்திய ஆசியாவில் உள்ள நாடுகள் உள்பட 53 நாடுகளை உள்ளடக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.