இங்கிலாந்து: மகாத்மா காந்திக்கு நினைவு நாணயம் வெளியீடு
இங்கிலாந்தில் மகாத்மா காந்திக்கு சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.


இங்கிலாந்தில் மகாத்மா காந்திக்கு சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சரான ரிஷி சுனாக் மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட, பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் , ‘ இந்த நாணயத்தில் இந்திய தேசிய மலரான தாமரையும் காந்தியின் ’என் வாழ்க்கையே என் செய்தி’ என்ற பொன்மொழியும் அச்சிடப்பட்டுள்ளது. இந்தியனான நான் தீபாவளியன்று இந்த நாணயத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ எனத் தெரிவித்தார்.
தங்கத்தாலும் வெள்ளியாலும் தயாரிக்கப்பட்ட இந்த நாணயம் நேற்று(நவ.4) முதலே விற்பனைக்கு விடப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...