கல்வித் துறையில் இந்தியா-அமெரிக்கா இடையே நல்லுறவு: தா்மேந்திர பிரதான்
கல்வித் துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையாகவே நல்லுறவைக் கொண்டுள்ளன என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.


கல்வித் துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையாகவே நல்லுறவைக் கொண்டுள்ளன என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.
இந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்த தேவையான அனைத்துத் திறன்களும் இரு நாடுகளிலும் உள்ளன என்றும் அவா் கூறினாா்.
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த கல்வி மாநாட்டில் அமெரிக்காவின் 20 முன்னணி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா். இந்த மாநாட்டில் இணையவழியில் பங்கேற்று அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசுகையில், ‘மாணவா்கள், ஆசிரியா்கள் உலகம் முழுவதும் சென்று ஆராய்ச்சி, கல்வி ஒருங்கிணைப்பு செய்யும் வகையில் இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய கல்வி முறை உலக அளவில் சாதனை படைக்கும் வகையில் இருக்கும் என்று கிளாஸ்கோ மாநாட்டில் பிரதமா் மோடி தனது உரையில் குறிப்பிட்டிருந்தாா். இதற்கு தேசிய கல்விக் கொள்கை உறுதுணையாக இருக்கும்.
கல்வித் துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையாகவே நல்லுறவைக் கொண்டுள்ளன. இந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்த தேவையான அனைத்துத் திறன்களும் இரு நாடுகளிலும் உள்ளன’ என்றாா்.
இணையவழி பாதுகாப்பு, சுகாதாரச் சேவை, உயிரி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தகவல் அறிவியல், வேளாண், பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட பெரும்பாலான அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இந்தக் கூட்டத்தில் இசைவு தெரிவித்தன என்றும், தேசிய கல்விக் கொள்கையை அந்தப் பல்கலைக்கழகங்கள் வரவேற்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...