ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தாய்லாந்து: கரோனாவால் 20 லட்சம் பேர் பாதிப்பு

தாய்லாந்தில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

News image
தாய்லாந்து: கரோனாவால் 20 லட்சம் பேர் பாதிப்பு
Updated On :12 நவம்பர் 2021, 6:54 am

DIN

தாய்லாந்தில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தாய்லாந்தில்  இதுவரை 20 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

நேற்று (நவ-11) வியாழக்கிழமை நிலவரப்படி புதிதாக 7,305 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 2,004,274 ஆக உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 19,883 ஆகப் பதிவாகியிருக்கிறது.

மேலும் தொற்றைக் கட்டுப்படுத்த எல்லைகளில் கவனமாக செயல்படுவதால் கரோனாவின் தீவிரம் குறையத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் தாய்லாந்து மக்கள் தொகையான 6.9 கோடி பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.