உலகம் முழுவதும் 750 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 750 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 750 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் நேற்று(நவ.15) நிலவரப்படி 750 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 312 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்கள் என்றும் தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
உலகம் முழுக்க இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25.35 கோடியாக உயர்ந்திருக்கிற நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தீவிரவமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | மேஜைக்கு ஒரு மாணவர்: மேற்கு வங்கத்தில் பள்ளிகள் திறப்பு
தற்போது உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 4.7 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.66 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.44 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.66 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 53.12 லட்சம் பேருக்கு சுகாதாரத்துறை பணியாளர்கள் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளனர் .
அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள் :
சீனா - 227.9 கோடி
இந்தியா - 112.19 கோடி
ஐரோப்பா ஒன்றியம் - 69 கோடி
அமெரிக்கா - 48.6 கோடி
பிரேசில் - 24.07 கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...